• April
    25
    Thursday

Main Area

Main



எங்கு இருக்கிறான் சின்னத்தம்பி? கும்கியுடன் ஜாலி விளையாட்டு!!

chinnathambi
chinnathambi
Loading...

சென்னை: ஊருக்குள் சுற்றித் திரியும் சின்னத்தம்பி யானை, தற்போது உடுமலைப்பேட்டை கிருஷ்ணாபுரம் பகுதியில் சுற்றித் திரிகிறது.

கோவை மாவட்டத்திலுள்ள பெரியதடாகம் ‌வனப்பகுதியில் விவசாய நிலங்களை சின்னத்தம்பி என்ற காட்டுயானை சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து பெரிய போராட்டத்துக்கு பிறகு சின்னத்தம்பியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். அப்போது லாரியில் ஏற்றும் போது சின்னத் தம்பியின் தந்தங்கள் உடைந்தது. மேலும், கும்கி யானைகள் குத்தியதில் அதன் உடலில் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.

இதனையடுத்து வாகனம் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள டாப்சிலிப் வனப்பகுதிக்கு சின்னத்தம்பி யானை கொண்டு செல்லப்பட்டது. சின்னதம்பி யானையின் இருப்பிடத்தை அறிய அதன் உடலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தியிருந்தனர். ஆனால் டாப்சிலிப் பகுதியில் விடப்பட்ட யானை சின்னத்தம்பி இரண்டு நாட்களுக்குள் மீண்டும் ஊருக்குள் புகுந்தது.

கோட்டூர், அங்கலக்குறிச்சி சுற்றுப்பகுதிகளிலுள்ள தென்னந்தோப்புகளில் புகுந்த சின்னத்தம்பியை வனத்துறையினர் மீண்டும் காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.

இதனிடையே, சின்னத்தம்பி யானை கும்கியாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால், வனவிலங்கு ஆர்வலர்கள் உள்ள்ளிட்டோரின் அழுத்தத்திற்கு இணங்கிய தமிழக அரசு, சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை. அதனை காட்டுக்குள்ளேயே திருப்பி அனுப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தது.

வழக்கு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் உடுமலைப்பேட்டை கிருஷ்ணாபுரம் குட்டையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சின்னத்தம்பியை, கரும்பு துண்டுகளை காட்டி அழைத்து வந்த வனத்துறையினர், அதற்கு லாரியில் கொண்டு வந்த தண்ணீரை பாய்ச்சி தாகம் தீர்த்தனர்.

பின்னர் குட்டையை நோக்கி திரும்பிய சின்னத்தம்பி, வழியில் அதனை பிடிப்பதற்காக கொண்டு வரப்பட்ட கலீம் என்ற கும்கி யானையை சந்தித்தது. ஆனால், இருவருக்குள்ளும் என்ன பரஸ்பரமோ தெரியவில்லை. இரு யானைகளும் ஜாலியாக துதிக்கியை கோர்த்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தன. தொடர்ந்து, அங்கிருந்து விடைபெற்ற சின்னத்தம்பி மீண்டும் குட்டையை நோக்கி பயணித்தது. அசம்பாவிதம் எதுவும் நடந்து விடாமல் தடுக்க, சின்ன தம்பியின் நடமாட்டம் குறித்து அப்பகுதி மக்களுக்கு காவல் துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.