• March
    24
    Sunday

Main Area

Main



ஒருவேளை அரசியலுக்கு வந்தால் ரஜினி சந்திக்கும் முதல் பிரச்சனை?!

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
Loading...

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தால் தமிழகமே கொந்தளிந்துக் கொண்டிருக்கும் வேளையில், ரஜினியின் மவுனம் மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து சில நாட்களுக்கு பின் பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனைக்கு சென்று சந்தித்தார் ரஜினிகாந்த். அப்போது சந்தோஷ் ராஜ் எனும் இளைஞர், ரஜினியை யார் நீங்க? என கேட்டு அவமானப்படுத்தினார். ரஜினியும் நான் தான்பா ரஜினிகாந்த் என சோகமாக பதிலளித்திவிட்டு திரும்பினார். ரஜினியை நெட்டிசன்கள் இந்த சமயத்தில் வைத்து செய்தனர். நான் தான்பா ரஜினிகாந்த், டிவிட்டர் டிரெண்டிங்கில் இடம்பிடித்தது.

rajini

அரசியலுக்கு வருவேன் என பல ஆண்டுகளாய் ஜகா வாங்கிக் கொண்டிருந்த ரஜினி, ஜெயலலிதா மறைவுக்குப் பின் அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார். அரசியலுக்கு வர ஆசைப்படும் ரஜினி, களப்பணி எதாவது செய்கிறாரா?, மக்கள் பிரச்சனைகளை கேட்டு அறிந்து தன்னால் இயன்றதை செய்கிறாரா?.. என்றால், அப்படி எதுவும் செய்யவில்லை. புதிய புதிய படங்களில் புக்கிங் ஆகி தொடர்ந்து நடித்து வருகிறார்.ரஜினி மக்கள் மன்றம் கேரள வெள்ளத்தின் போது உதவியதை தவிர சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை.

ரஜினி

தற்போது பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துக்கு தமிழகமே கொந்தளித்து வருகிறது. ரஜினியின் திரையுலக போட்டியாளரான கமல்ஹாசன், பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து நடவடிக்கை காவல்துறையில் புகார் அளித்ததோடு, அவர் கட்சி சார்பாக கண்டன பேரணியும் நடத்தினார். ஆனால் ரஜினி, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து ஒரு ட்வீட் கூட போடவில்லை. அடுத்த பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார், இவர் எந்த நினைப்பில் அரசியலுக்கு வருவேன் என அறிவித்தார் என்பதே மாபெரும் குழப்பமாக இருக்கிறது. ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த சிலரே இதனால் அதிருப்தியில் இருக்கின்றனர். கிருஷ்ணகிரி ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் கொத்தாக திமுகவில் இணைந்தது அதற்கு ஓர் உதாரணம்.

திமுக

எந்த சமூக பிரச்சனைகளிலும் தலையிடமாட்டேன், அரசியலுக்கு வந்த பிறகுதான் பேசுவேன் என ரஜினி மவுனம் காப்பது அவருக்கே வெளிச்சம். ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்தால், மக்கள் அவரைப் பார்த்து கேட்கப் போகும் யார் நீங்க?.. என்ற வார்த்தைதான் அவரின் முதல் பிரச்சனை.

2018 TopTamilNews. All rights reserved.