• May
    26
    Sunday

Main Area

Main



குழந்தை பெற்றுக்கொள்ளாதது ஏன் தெரியுமா! ரகசியத்தை உடைத்த நடிகை !?

விஜயசாந்தி (கோப்புப்படம்)
விஜயசாந்தி (கோப்புப்படம்)
Loading...

ஒரு காலத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக அதிரடி காட்டியவர் தெலுங்கு நடிகை விஜயசாந்தி.அதன் பிறகு வாய்ப்புகள் குறைந்ததும் அரசியலில் இறங்கினார். 1998-ல் பாரதிய ஜனதாவில் சேர்ந்து ‘பாரதிய மகிளா மோர்சா’வின் செயலாளர் ஆகி ஆரம்பத்திலேயே அதிரடி காட்டிய சம்பவங்களும் உண்டு.

1999-ல் நடந்த மக்களவை தேர்தலில் கடப்பாவில் சோனியாவுக்கு எதிராக போட்டியிடுவதாக சொல்லி வேட்பு மனு தாக்கல் செய்தார். அதன் பிறகு சோனியா பெல்லாரி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்ததை தொடர்ந்து தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.

அதன் பிறகு இவரளவுக்கு கட்சி தாவியவர்கள் யாரும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அத்தனை கட்சிக்கும் போய், கடைசியாக 2004-ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதைத்தொடர்ந்து 2018-ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஸ்டார் பேச்சாளராக விஜயசாந்தியை அறிவித்தார் ராகுல் காந்தி.

2019-மக்களவை தேர்தலுக்காக தற்போது தெலங்கானா மாநிலம் முழுக்க காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் இருக்கிறார். அப்படி ஒரு மேடையில் சமீபத்தில் பேசும்போது’நான் குழந்தை பெற்றுக் கொள்ளாததை விமர்சிக்கிறார்கள்! தெலங்கானா மக்கள்தான் என் பிள்ளைகள்...அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுக்கத்தான் நான் குழந்தை பெற்றுக்கொள்ள வில்லை’ என்று சொல்ல, அதற்கு தெலங்கானா மக்களிடம் செம ரெஸ்பான்ஸ்!

இப்போது எல்லா மேடைகளிலும் இந்த விஷத்தை மறக்காமல் குறிப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

2018 TopTamilNews. All rights reserved.