• July
    17
    Wednesday

Main Area

Main



தொடரும் '2.0' வசூல் சாதனை: 'பாகுபலி 2' சாதனையை நெருங்கியது '2 0': உண்மை நிலவரம் என்ன?

2.0
2.0
Loading...

சென்னை: '2.0' வெளியான 6 நாட்களில் சென்னையில் மட்டும் சுமார் 13 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

லைகா நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ‘2.0’ திரைப்படம் மாஸாக வெளியானது. செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சு காரணமாக அழிந்து வரும் பறவைகள் இனத்தை பாதுகாப்பது குறித்த சமூக தகவலை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

இந்தியாவில் அதிக பொருட் செலவில் அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான இப்படத்தில், ஆசியாவிலேயே முதன்முறையாக 4டி சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2.0 உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இப்படம் ரூ 500 கோடி வசூலை எட்டியதாக தயாரிப்பு நிறுவனமே அறிவித்துவிட்டது. தற்போது வெளியான 6 நாட்களில் சென்னையில் மட்டும் 13 கோடியை கடந்துள்ளது. இதனால் '2.0' முழுஓட்டத்தில் 'பாகுபலி 2' படத்தின் சென்னை வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்னையில் 'பாகுபலி 2' திரைப்படம் ரூ. 18.8 கோடியே வசூல் சாதனையாக கருதப்படுகிறது. இப்போதுள்ள சூழல்படி வரும் வாரத்தின் இறுதிநாட்களில் இந்தச் சாதனையை '2.0' முறியடிக்கும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கருதுகிறார்கள். தமிழகத்தில் பி மற்றும் சி சென்டர்கள் எனப்படும் சென்னையைத் தாண்டிய ஊர்களில் வசூல் குறைந்த அளவிலேயே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

2018 TopTamilNews. All rights reserved.