• July
    17
    Wednesday

Main Area

Main



காவிரியில் கர்நாடகா ஒரு அணையா? இரண்டு அணையா? சட்டப்பேரவையில் துரைமுருகன் கேள்வி

duraimurugan
duraimurugan
Loading...

சென்னை: காவிரியில் கர்நாடக அரசு ஒரு அணை காட்டுகிறதா? அல்லது இரண்டு அணை காட்டுகிறதா? என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரியில் கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டும் விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று கூடியது. அப்போது, மேகேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். இதையடுத்து, தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், காவிரியில் கர்நாடக அரசு ஒரு அணை காட்டுகிறதா? அல்லது இரண்டு அணை காட்டுகிறதா? என கேள்வி எழுப்பினார். மேலும், கர்நாடகா அரசு நம்மை ஏமாற்ற பார்க்கிறார்கள். எந்த இடத்திலும் அணை கட்டக்கூடாது என வலியுறுத்த வேண்டும் என்றார்.

அதற்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கர்நாடக அரசு 2 அணைகள் கட்ட அப்போது அனுமதி கோரியது. அந்த அணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது மேகேதாட்டுவில் புதிய அணை கட்ட முயற்சி செய்துவருகிறார்கள். இதற்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்துள்ளோம் என்றார்.

2018 TopTamilNews. All rights reserved.