• July
    16
    Tuesday

Main Area

Main



தெரு நாய்களுக்கு உணவளித்த பெண்ணுக்கு லட்சக் கணக்கில் அபராதம்?!..

pc: Mumbai mirror
pc: Mumbai mirror
Loading...

மும்பை: தெரு நாய்களுக்கு உணவளித்ததற்காக நேஹா தத்வானி என்ற பெண்ணுக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதித்துள்ளது நிசார்க் ஹெவன் எனும் கூட்டுறவு அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகம்.

கண்டிவலி, மஹாவீர் நகர் பகுதியில் அமைந்துள்ளது நிசார்க் ஹெவன் எனும் கூட்டுறவு அடுக்குமாடி குடியிருப்பு. இதில் வசித்து வருகிறார் நேஹா தத்வானி எனும் விளம்பர நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர். விலங்குகள் மீது பாசம் கொண்ட நேஹா, நாய்களுக்கு உணவளித்து வந்திருக்கிறார். தெரு நாய்களுக்கு உணவளித்து வருவது எங்களை அச்சுறுத்தும் விதமாக உள்ளது என குடியிருப்புவாசிகள் புகார் அளித்துள்ளனர். அதன்பெயரில் நேஹாவுக்கு இதுவரை 3.60 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

apart

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த நிசார்க் ஹெவன் குடியிருப்பு நிர்வாகத் தலைவர் மிதேஷ் போரா, குடியிருப்பில் உள்ள பலரும் புகார் அளித்துவிட்டனர். எங்களுக்கு விலங்குகள் மீது பாசம் உண்டு, அதேசமயம் மனிதர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தெரு நாய்கள் வயதானவர்களை பார்த்தும், குழந்தைகளை பார்த்தும் குரைக்கிறது, அவர்களை அச்சுறுத்தும் விதமாக உள்ளது. குடியிருப்புக்கு வெளியே வைத்து நாய்களுக்கு உணவு அளித்தால் பிரச்சனையில்லை என்கிறார்.

zvvzc

ஆனால் நேஹா தத்வானி குடியிருப்புவாசிகள் கருத்துக்கு மாறான கருத்தை முன்வைக்கிறார். இதுகுறித்து அவர், நான் உணவளிப்பவை தெருநாய்கள் இல்லை, அவை பிறந்தது முதலே உணவளித்து வருகிறேன். நாய்களுக்கு உணவளித்ததற்காக இதுவரை 3.60 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது குடியிருப்பு நிர்வாகம். தினம் 2,500 ரூபாய் என்ற கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. நான் விலங்குகள் நல வாரியத்தில் புகார் அளித்த பின்பு அபராதம் விதிப்பதை நிறுத்தியிருக்கிறார்கள். என்னைப் போலவே மற்றொரு நபருக்கு அபராதம் விதித்தது இந்த நிர்வாகம். நான் அபராதம் செலுத்த தயாராக இல்லை, என் தாயும் தங்கையும் இங்கே வந்து வசிக்க போகிறார்கள். அபராதம் இல்லாமல் பராமரிப்பு செலவை மட்டும் செலுத்திவிட்டு நான் இங்கிருந்து காலி செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க

சமாதானமா?சவாலா? சாய்ஸ் யுவர்ஸ்! : சீமானுக்கு எச்சரிக்கை விடுத்த ராகவா லாரன்ஸ்

 

2018 TopTamilNews. All rights reserved.