• March
    21
    Thursday

Main Area

Main



ஓரினச் சேர்க்கையை ஏற்கமுடியாது - ராணுவத் தளபதி பிபின் ராவத்

bipinrawat
bipinrawat
Loading...

புதுதில்லி: ஓரின சேர்க்கையை ஏற்க முடியாது என ராணுவத் தளபதி பிபின் ராவத் திட்டவட்டம் தெரிவித்துள்ளார்.

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 377-ன் படி, இயற்கைக்கு மாறாக ஆண், பெண் அல்லது விலங்கினங்களுடனான உறவு தண்டனைக்குரியதாக இருந்தது. இந்த குற்றத்துக்கு, ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்கவும் அச் சட்டம் வழிவகை செய்தது.

ஆனால், உலக நாடுகள் பலவற்றில் ஓரினச்சேர்க்கைக்கு அனுமதியளிக்கப்பட்டு, அதனை பின்பற்றி வரும் நிலையில், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 377-க்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஓரினச் சேர்க்கையாளர்கள் விரும்பி உறவு வைத்துக் கொள்வதை தடுக்கமுடியாது என குறிப்பிட்டு தீர்ப்பளித்தது. அத்துடன் தன்பாலின உறவைத் தடை செய்யும் சட்டம் 377ஐ ரத்து செய்தது. இதற்கு ஆதரவும், எதிர்ப்புமாக பல்வேறு கருத்துக்கள் எழுந்தன.

இந்நிலையில், ஓரின சேர்க்கையை ஏற்க முடியாது என ராணுவத் தளபதி பிபின் ராவத் திட்டவட்டம் தெரிவித்துள்ளார். ராணுவத் தளபதியின் வருடாந்திர செய்தியாளர் சந்திப்பின் போது, இதனை அவர் தெரிவித்தார். ஓரினச் சேர்க்கை போன்றவை ராணுவத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட அம்சங்கள் என தெரிவித்த அவர், நாங்கள் பழமைவாதிகள் தான் என்றும், ராணுவத்தில் ஓரினச் சேர்க்கை போன்றவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். அதேசமயம், ராணுவம் என்பது நிச்சயம் சட்டத்திற்கு மேலான அமைப்பு அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.