• June
    27
    Thursday

Main Area

Main



ஷிகர் தவானுக்கு காயம்; அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள் !!

ஷிகர் தவான்
ஷிகர் தவான்
Loading...

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வலை பயிற்சியின் போது ஷிகர் தவான் காயம் அடைந்துள்ளார். 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த சில தினங்களில் துவங்க உள்ளதால் அனைத்து அணிகளும், உலகக்கோப்பைக்காகத் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர். 

dhswaan

உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காகக் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இங்கிலாந்து சென்ற கோஹ்லி தலைமையிலான இந்திய அணியும், தீவிரமாக வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. 

dhawan

இந்த நிலையில், ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய வலை பயிற்சியின் போது இந்திய அணியின் துவக்க வீரரான ஷிகர் தவான் காயமடைந்துள்ளார். 

dhawan

வலைபயிற்சியின் போது பந்துவீச்சாளர் வீசிய ஷார்ட் பால் ஒன்று  ஷிகர் தவானின்  ஹெல்மெட்டில் தாக்கியுள்ளது. காயமடைந்த ஷிகர் தவானை இந்திய அணியின் மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர். மருத்துவக் குழுவின் அறிக்கை வெளியான பிறகே ஷிகர் தவானிக்கு ஏற்பட்ட காயத்தின் நிலை குறித்த முழு தகவல் தெரியவரும்.

2018 TopTamilNews. All rights reserved.