• July
    16
    Tuesday

Main Area

Main



உலகக்கோப்பை எங்களுக்கு தான்; சவால் விடும் ஆடம் கில்கிறிஸ்ட் !!

ஆடம் கில்கிரிஸ்ட்
ஆடம் கில்கிரிஸ்ட்
Loading...

உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணியே வெல்லும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிரிஸ்ட் தெரிவித்துள்ளார். 

adam gilchrist

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்  இந்த மாதம் 30 தேதி இங்கிலாந்தில் துவங்க உள்ளது. 
இந்த தொடரில் பங்கேற்க அனைத்து அணிகளும் இங்கிலாந்தை நோக்கி அடுத்தடுத்து படையெடுத்து வரும் நிலையில், முன்னாள் வீரர்கள் பலர் தொடர் உலகக்கோப்பை குறித்தான தங்களது கருத்துக்களையும் கணிப்புகளையும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். 
அந்த வகையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிரிஸ்ட், உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணியே வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
இது குறித்து பேசிய கில்கிறிஸ்ட், ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் போதிய பலத்துடன் உள்ளது. நான் பல உலகக்கோப்பையை பார்த்துள்ளேன், என்னை பொருத்தவரையில் இந்த உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணியே வெல்ல வேண்டும், ஆஸ்திரேலிய அணியே வெல்லும் எனற நம்பிக்கையும் உள்ளது” என்றார்.

2018 TopTamilNews. All rights reserved.