இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாக இதுவே காரணம்! வெளியான பகீர் தகவல்!!
இந்தியாவில் மது போதைக்கு இளைஞர்கள் அடிமையாவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இன்றைய இளையதலைமுறையினரிடையே அதிகரித்து வரும் பார்ட்டி கலாச்சாரம்தான் மதுப் பழக்கத்திற்கு அடிமையாக்கிவருகிறது. இந்நிலையில் மன பதட்டம் அதிகரிப்பதே, இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாக முக்கிய காரணம் என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக 18 முதல் 21 வயது வரையுள்ள இளைஞர்கள் மனதளவில் பாதிக்கப்பட்ட பாதிக்கப்படுவதே மதுபழக்கத்திற்கு முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது. மதுவை தொடர்ந்து சிகரெட், பழக்கம், கஞ்சா போன்ற பழக்கங்களும் தொடர்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 1956-1960ம் ஆண்டிற்கு உட்பட்ட காலத்தில் மதுவுக்கு அடிமையானவர்கள் 19.5 சதவீதமாக இருந்தனர். இந்த சதவீதம் 1981-85ம் ஆண்டிற்கு உட்பட்ட காலத்தில் பிறந்த இளைஞர்களிடையே 74.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது தற்போதைய 90ஸ் கிட்ஸ்களிடையே 3 மடங்கு அதிகரித்துள்ளது.
சிறுவயதில் ஏற்படும் மனப்பதட்டமே இதெற்கெல்லாம் காரணம் என பிரிஸ்டோல் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சிறு வயது முதலே குழந்தைகளின் குறிப்பாக ஆண் குழந்தைகளின் மனப்பதட்டத்தைக் கண்டறிந்து அதற்குரிய சிகிச்சைகளை அளித்தாலே எதிர்காலத்தில் அவர்கள் மதுவுக்கு அடிமையாவதைத் தடுக்கலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.