தேடிவரும் நாற்காலி, ஓடி ஒளியும் மிஸஸ்.ஒபாமா!

 

தேடிவரும் நாற்காலி, ஓடி  ஒளியும் மிஸஸ்.ஒபாமா!

”நாட்டிற்கு சேவை செய்வதற்கு எத்தனையோ வழிகள் உண்டு. அவற்றில் ஏற்கெனவே நிறையவற்றை நான் செய்துகொண்டிருக்கிறேன், ஆனால், ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியாக அமர்ந்துகொண்டு நாட்டிற்கு சேவை செய்யும் அந்த விஷயம் எனக்கு செட்டாகாது, நேரத்தை வேஸ்ட் பண்ணாமல் அடுத்த ஆள் பார்த்துக்கொள்ளவும்”

”இனிமேலும் எங்களால் இந்த ட்ரம்ப் காமெடியை பொறுத்துக்க முடியாது, இந்த நாட்டை தொடர்ந்து வல்லரசா வச்சு காப்பாத்துற திறமை உங்ககிட்டதான் இருக்கு, நீங்க அவசியம் வரணும்” என அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிசேல் ஒபாமாவை வருந்தி அழைத்துக்கொண்டிருக்கிறார்கள் அமெரிக்காவில். இரண்டு முறை பதவிவகித்த மிஸ்டர் ஒபாமாவால் திரும்பவும் அதிபராக முடியாது, எனவே மிஸஸ் ஒபாமா போட்டியிட்டால் நிச்சயம் வெல்வார் என்பது அவருடைய ஆதரவாளர்களின் தீவிர நம்பிக்கை. இதுவே ரஜினியாக இருந்தால் என்ன சொல்லியிருப்பார், எல்லாம் மேல இருக்கவன் பாத்துப்பான் என மேல்நோக்கிய கையை 25 வருடங்கள் கீழே இறக்காமல் நீட்டிக்கொண்டே இருந்திருப்பார். ஆனால், இவர் மிசேல் அல்லவா, வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என ஓப்பனாக சொல்லிவிட்டார். ”அதற்கு வாய்ப்பே இல்லை” என்று.
 

The Obamas

”நாட்டிற்கு சேவை செய்வதற்கு எத்தனையோ வழிகள் உண்டு. அவற்றில் ஏற்கெனவே நிறையவற்றை நான் செய்துகொண்டிருக்கிறேன், ஆனால், ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியாக அமர்ந்துகொண்டு நாட்டிற்கு சேவை செய்யும் அந்த விஷயம் எனக்கு செட்டாகாது, நேரத்தை வேஸ்ட் பண்ணாமல் அடுத்த ஆள் பார்த்துக்கொள்ளவும்” என்று ஒரேயடியாக சொல்லிவிட்டார். ஆனாலும் பாருங்க, விட்டபாடில்லை. “ட்ரம்ப்பை வீட்டுக்கு அனுப்பும் தகுதியுள்ள ஒரே ஒருவர் உண்டென்றால் அது மிசேல்தான்” என பிரபல ஹாலிவுட் இயக்குநர் மைக்கேல் மூர் தெரிவித்திருக்கிறார்.