2.6 லட்சம் பேர் அமெரிக்காவில் மரணம் – கொரோனாவின் கோரம்
உலகின் பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவையும் விட வில்லை கொரோனா. தற்போதைய நிலையில் உலகளவில் அதிக கொரோனா பாதிப்பு அமெரிக்காவுக்கே.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 20 லட்சத்து 97 ஆயிரத்து 561 பேர்.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 36 லட்சத்து 80 ஆயிரத்து 153 நபர்கள்.
கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 81 ஆயிரத்து 968 பேர். இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.

பிப்ரவரி மாதம் 17-ம் தேதி அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 15 மட்டுமே. மார்ச் 17- அது 6905 ஆக அதிகரித்தது. ஆனால், மார்ச் 27 அன்று அதாவது பத்தே நாளில் 1,08,488 எனும் பெரும் எண்ணிக்கைக்குத் தாவியது. அதற்கு அடுத்து எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைக்க முடியவில்லை அமெரிக்காவால். இன்றைய நிலையில் அமெரிக்காவின் மொத்த கொரோனா பாதிப்பு 71,41,319 பேர்.
அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 43,99,996. சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 2 லட்சத்து 6 ஆயிரத்து 608 பேர்.

பிப்ரவரி மாதம் 29 –ம் தேதி அமெரிக்காவில் முதல் மரணம் நடந்தது. மே மாதம் 24 –ம் தேதி அது ஒரு லட்சமாக உயர்ந்தது. செப்டம் 16-ம் தேதி 2 லட்சமாக அதிகரித்தது. ஏப்ரல் 21-ம் தேதி 2748 பேர் ஒரே நாளில் இறந்தனர். தற்போது 2,06,608 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஆனால், இறப்பு விகிதம் நாளடைவில் குறைந்து வருகிறது.
உலகில் தினந்தோறும் அதிக மரணம் நடக்கும் முதல் மூன்று நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. பிரேசில், இந்தியா ஆகியவை மற்ற நாடுகள்.