நேபாள் விமான விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு - 32 பேர் சடலமாக மீட்பு

 
Nepal crash Nepal crash

நேபாள நாட்டின் பொக்காரோ விமான நிலையத்தில், நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. 

நேபாள நாட்டின் காத்மண்டுவில் இருந்து பொக்காரோ விமான நிலையம் நோக்கி 68 பயணிகளுடன் யேட்டி விமானம் வந்துகொண்டிருந்தது.. இந்நிலையில் விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் பொக்காரோ விமான நிலையத்தில் ஓடுதளத்தை விட்டு நகர்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் அந்த விமான தீப்பிடித்து எரிந்தது. அந்த விமானத்தில் 68 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் பயணிகள் என மொத்தம் 72 பயணம் செய்த நிலையில், அதில் 32 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் விமானத்தில் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விமானத்தில் 5 இந்தியர்கள் பயணம் செய்தது தெரியவந்துள்ளது. 

விபத்துக்குள்ளான பொக்காரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 72 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் நேபாள நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணிகளை தீவிரப்படுத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.