இனி வாரத்தில் நான்கரை நாள் மட்டும் வேலை - ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு...

 
ஐக்கிய அரபு அமீரகம்

இனி வாரத்தில் நான்கரை நாட்கள் மட்டும் வேலை நாட்களாக  என ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

அபுதாபி, அஜ்மான், ஷார்ஜா, துபாய் உள்ளிட்ட  7 இஸ்லாமிய நாடுகளை உள்ளடக்கியது ஐக்கிய அரபு அமீரகம். இதுவரை ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு ஊழியர்களுக்கு ஞாயிறு முதல் வியாழன் வரை 6 நாட்கள் வேலை நாட்களாகவும்,  வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை நாளாகவும் இருந்து வந்தது. அங்கு பல ஆண்டுகளாக இதே நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பல தனியார் நிறுவனங்களும்,  பள்ளிக்கூடங்களும் கூட நடைமுறையையே  பின்பற்றுகின்றன.

1

இந்நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் வேலை நாட்களில் புதிய மாற்றத்தை செய்து அறிவித்துள்ளது.  அதன்படி 6 நாட்களாக இருந்த வேலை நாட்கள் 4. 1/2  நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அறிமுகமாகும் என கூறப்பட்டிருக்கிறது. 

2

இதன்படி திங்கள்கிழமை  முதல் வியாழக்கிழமை வரை  முழு வேலை நாட்களாகவும்,  வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை  (நான்கரை மணி நேரம் மட்டும்)  மட்டும் வேலை நாட்களாகவும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.  வெள்ளிக்கிழமை மதியம் 1.15 மணிக்கு தொழுகை முடிந்ததிலிருந்து சனி,  ஞாயிறு என இரண்டரை நாட்கள் விடுமுறையை அறிவித்துள்ளது