அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூடு.. சிகாகோவில் 5 பேர் பலி; 16 பேர் காயம்..

 
அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூடு..  சிகாகோவில் 5 பேர் பலி;  16 பேர் காயம்..

அமெரிக்காவின் சிகாகோ நகரில் பல்வேறு இடங்களில்  நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களில்  5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்  16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.    

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  ஆங்காங்கே பொதுமக்கள் கூடும் இடங்களில் இளைஞர்கள் திடீர் திடீரென  கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் பல அப்பாவி மக்கள்  உயிரிழக்கின்றனர்.  இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் கைத் துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்குமாறு மாகாண அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தார். .அதன்பேரில்  சில மாகாணங்களில் துப்பாக்கி  பயன்பாட்டுச் சட்டம் கடுமையாக்கப்பட்டிருக்கிறது.  இருந்தபோதிலும் அங்கும் துப்பாக்கி வன்முறை குறைந்தபாடில்லை.   இந்த நிலையில், சிகாகோவில் வார இறுதி நாட்களில்  வெவ்வேறு இடங்களில்  நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 போ் உயிாிழந்துள்ளனா். மேலும் 16 போ் காயம் அடைந்துள்ளதாக காவல் துறையினர்  தொிவிக்கின்றனா்.

அமெரிக்கா

தெற்கு அல்பானியில் அதிகாலையில்  அடையாளம் தொியாத நபா்கள் பெண் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.   படுகாயாங்களுடன் மீட்கப்பட்ட அவர்  மருத்துவமனைக்கு  கொண்டு செல்லும் வழியில் உயிாிழந்தாா்.  இதேபோல் இன்டியானா பகுதியில் காாில் சென்று கொண்டிருந்த நபரை மா்ம நபா்கள் துப்பாக்கியால் சுட்டதில்,  அவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்தாா். மற்றொரு பகுதியிலும் இதுபோன்று  நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவா் உயிாிழந்தாக போலீசாா் தகவல் தொிவித்தனா்.  சவுத் டேமன் பகுதியில் இளைஞர்கள்  4 போ் பேசி கொண்டிருந்தபோது காாில் வந்த அடையாளம் நபா் ஒருவா்,  அவா்கள் மீது சரமாாியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினார். இந்த சம்பவத்தில்,  23 வயதான நபா் ஒருவா் உயிாிழந்தார்.  மற்ற 3 பேரும் காயம் அடைந்தனா்.

​துப்பாக்கிச் சூடு

இதேபோல்  சவுத் ஜஸ்டின் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவா் பலத்த காயம் அடைந்தார்.  உடனடியாக  சிகாகோ பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார் அவரை  பாிசோதித்த  மருத்துவர்கள், அவர்  ஏற்கனவே உயிாிழந்து விட்டதாக தொிவித்தனா். சிகாகோவில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்  சூடு சம்பவங்களில் 5 பே கொல்லப்பட்டதுடன், 16 பேர் காயமடைந்திருக்கின்றனர், இதுதொடர்பாக போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.