ஒரே நாளில் 50 லட்சம் பேர் பாதிப்பா?? பாதிப்பு விவரங்கள் வெளியிடுவதை நிறுத்திய சீனா..

 
china corona

சீனாவில்  ஒரே நாளில் 50 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், தினசரி கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிடுவதை அந்நாட்டு அரசு நிறுத்தியுள்ளது.  

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து தான்  முதன்முதலில்  கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. பின்னர் அந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவியது.  உலக நாடுகள் ஸ்தம்பித்து போகும் அளவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. கொரோனாவின் தாக்கம் மெல்ல குறைந்து, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில் மீண்டும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.  இந்த முறையும் சீனாவில் இருந்தே வைரஸ் பரவத் தொடங்கியிருக்கிறது . உருமாறிய ஒமைக்ரானின்  பி.எப்.7 வைரசால் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.

china

இதனால் சீனாவில் அனைத்து மருத்துவமனைகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. பாதிப்புகள் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது.  அதே போல உயிரிழப்புகளும் அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  சீனாவில் ஒரு நாளில் 49 லட்சம் முதல் 53 லட்சம் வரை புதிய கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.  இந்த பாதிப்பானது இன்று , மேலும் 10%  அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை தளர்த்த வேண்டும் என்று மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

china

நாடு முழுவடும் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக கொரோனா  கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால்  மீண்டும் அங்கு கொரோனா பாதிப்புகள் அதிகமாகி வருகிறது. இதுகுறித்து அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று  வெளியிட்டுள்ள அதிர்ச்சி செய்தி என்னவென்றால்,  சீனாவில் அடுத்த ஆண்டில் 10 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.  இதேபோன்றதொரு  எச்சரிக்கையை  ஹாங்காங் பல்கலைக்கழக ஆய்வாளர்களும்  விடுத்துள்ளனர். இந்நிலையில் சீன நகரம் ஒன்றில், ஒரே நாளில்  50 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இந்த செய்தி மறுநாளே அந்நாட்டு ஊடகங்களில் இருந்து நீக்கப்பட்டது.  அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டு வருவவதால், இன்று முதல் தாங்கள் கொரோனா பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை வெளியிட மாட்டோம் என்று சீனா தெரிவித்துள்ளது.