நைஜீரியா நாட்டில் பயங்கர குண்டுவெடிப்பு - 54 பேர் பரிதாபமாக பலி

 
Blast

நைஜீரியா நாட்டின் நசராலாபெனு மாகாணத்திற்கு அருகே நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் 54 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். 

நைஜீரியாவின் வட மத்திய பகுதியில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அவ்வபோது இருதரப்பினருக்கும் இடையே பெரிய அளவில் வன்முறை நடப்பது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், நைஜீரியாவின் வட மத்திய பகுதியில் உள்ள நசராலாபெனு மாகாணங்களுக்கு இடையே இன்று பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது யார் என்பது தெரியவில்லை. குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இதுதொடர்பாக நசராலா மாகாண கவர்னர் அப்துல்லாஹி கூறும் போது, "இந்த சம்பவத்தால் ஏற்படக்கூடிய பதட்டத்தை தணிப்பதை உறுதி செய்வதற்கு பாதுகாப்பு நிறுவனங்களை சந்தித்து வருகிறோம். குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.