57 நாடுகளில் திருட்டு ஒமைக்ரான்... தீவிரமடையும் பாதிப்பு - எச்சரிக்கும் WHO!

 
ஒமைக்ரான்

டெல்டா கொரோனாவிற்கு அடுத்தப்படியாக தற்போது ஒமைக்ரான் எனும் உருமாறிய கொரோனா உலகம் முழுவதும் பரவியுள்ளது. தென்னாப்பிரிக்கா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. இந்த நாடுகளில் பெரும்பாலோனோர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட போதிலும் ஒமைக்ரான் தாக்கியது. ஆனால் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை. வீட்டிலிருந்தபடியே ஒமைக்ரானை மக்கள் விரட்டிவிட்டனர். இந்தியாவில் மூன்றாம் அலையை ஒமைக்ரான் உருவாக்கியது. 

தமிழ்நாட்டிலும் இதன் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் தான் ஒமைக்ரான் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. அதேபோல பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாகவும் ஒமைக்ரான் கொரோனா தாக்கி வருகிறது. இச்சூழலில் ஒமைக்ரானிலிருந்து உருமாறி புதிதாக ஒரு துணை வேரியண்ட் (Sub Variant) உருவாகியுள்ளது. இது தற்போது பிரிட்டன் போன்ற நாடுகளில் பரவி வருகிறது. இதற்கு BA.2 என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல இதற்கு stealth Omicron எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Omicron 'sub-variant' Throws Up New Virus Questions

அதாவது திருட்டு ஒமைக்ரான். பொதுவாக டெல்டாவுக்கும் ஒமைக்ரானுக்கும் எஸ் ஜீன் மூலமே வேறுபாடு கண்டறியப்படும். ஆனால் இந்த திருட்டு ஒமைக்ரானை பொறுத்தவரை சாதாரண கொரோனாவில் காணப்படும் அதே எஸ் ஜீன் இதிலும் இருக்கிறது. ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் கூட ஒமைக்ரானை கண்டறிய முடிவதில்லை. திருட்டு ஒமைக்ரான் இந்தியாவிலும் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒமைக்ரானை விட மகக்ளிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

Omicron subvariant BA.2 raises new questions about puzzling evolution of  virus behind COVID-19 | CBC News

தற்போது வரை 57 நாடுகளில் இந்த திருட்டு ஒமைக்ரான் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. ஒருசில நாடுகளில் 50% பேருக்கு ஒரிஜினல் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டால் 50% பேருக்கு இந்த BA.2 ஒமைக்ரான் வேரியண்ட் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறியுள்ளது. இதன் பரவும் தன்மை, அதன் வீரியம், பரவும் வேகம் உள்ளிட்ட பண்புகள் குறித்து ஆராய்ச்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. கொரோனா எத்தனை முறை உருமாறினாலும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றினால் போதும் என மக்களை அறிவுறுத்தியுள்ளது.