அமெரிக்காவில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு

 
earth

அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீடுகளை இட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். 

அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸில் உள்ள எண்ணெய் உற்பத்தி செய்யும் பகுதியில் உள்ளூர் நேரப்படி மாலை  மாலை 5:35 மணிக்கு திடீர்  நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இருந்தது.  இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கின, ஆனால் பெரிய அளவிலான சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கம் மிட்லாண்டிலிருந்து வடமேற்கே 22 கிலோமீட்டர்   தொலைவில் 8 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மிதமான நிலநடுக்கம், வடக்கு டெக்சாஸ் பன்ஹேண்டில் அருகே உள்ள லுபாக் வரை, மிட்லாண்டிற்கு தென்மேற்கே 20 மைல் தொலைவில் உள்ள ஒடெசா வரை உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம்  மற்றும் உயிர்சேதங்கள் தொடர்பான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.