சீனாவில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கம்மை உறுதி

 
monkeypox

சீனாவில் முதல் முறையாக ஒரு நபருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது குரங்கம்மை நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதேபோல் குரங்கம்மை நோய் உலக சுகாதார அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்தியாவையும் அந்த நோய் விட்டு வைக்கவில்லை. முதல் முதலில் கேரள மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் குரங்கம்மை பாதிப்பு இருப்பது தெரியவந்தது.   இந்தியாவில் இதுவரை  13 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

monkeypox

இந்நிலையில், சீனாவில் முதல் முறையாக ஒரு நபருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ச்வெளிநாட்டில் இருந்து சோங்கிங் நகரம் வந்த ஒரு நபருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. அந்த நபர் உட்பட சில பயணிகள் விமான நிலையம் வந்ததும், கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தனிமைப்படுத்தப்படு இருந்தனர். அப்போது அவருக்கு உடலில் தோல் அரிப்பு போன்ற பாதிப்பு உண்டானது. பின் அந்த நபருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.  அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.