ஈரான் நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கம்மை

 
monkeypox

ஈரான் நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது குரங்கம்மை நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மையின் தாக்கம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் குரங்கம்மை நோய் உலக சுகாதார அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்தியாவையும் அந்த நோய் விட்டு வைக்கவில்லை.  இந்தியாவில் இதுவரை 10 பேருக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.  

இந்நிலையில், ஈரான் நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 34 வயது பெண் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதும், அவர் தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.