முதலில் கடித வெடிகுண்டு.. அடுத்து ரத்தம் தோய்ந்த மர்ம பார்சல்.. - உக்ரைன் தூதரங்களுக்கு தொடரும் அச்சுறுத்தல்..

முதலில் கடித வெடிகுண்டு.. அடுத்து ரத்தம் தோய்ந்த மர்ம பார்சல்.. - உக்ரைன் தூதரங்களுக்கு தொடரும் அச்சுறுத்தல்..

அமெரிக்கா, உக்ரைன்  உள்ளிட்ட நாடுகளின்   தூதரகங்களுக்கு  அனுப்பப்பட்ட கடித  வெடிகுண்டுகளால் ஏற்பட்ட பதற்றம் தனிவதற்குள், ஸ்பெயினில்  உக்ரைன்  தூதரகங்களுக்கு விலங்குகளின் உடல் பாகங்கள் அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாட்ரிட்டில் உள்ள அமெரிக்கா,  உக்ரைன் நாடுகளின் தூதரகங்களுக்கு அண்மையில் கடித  வெடிகுண்டுகள் அனுப்பப்பட்டிருந்தன. இதில் உக்ரைன்  தூதரகத்திற்கு வந்த குண்டு வெடித்ததில் ஊழியர் ஒருவர் காயமடைந்தார்.   இதேபோல் அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்பப்பட்டிருந்த கடித வெடிகுண்டு  கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கம் செய்யப்பட்டது.  ஸ்பெயின் முழுவதும் பல்வேறு தூதரகங்கள் மற்றும் ராணுவ படைத்தளத்திற்கு அனுப்பப்பட்ட 6 கடித வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதால் நாடு முழுவதும் பதற்றம் நிலவியது.

முதலில் கடித வெடிகுண்டு.. அடுத்து ரத்தம் தோய்ந்த மர்ம பார்சல்.. - உக்ரைன் தூதரங்களுக்கு தொடரும் அச்சுறுத்தல்..

இந்த நிலையில் ஹங்கேரி, நெதர்லாந்து, போலந்து, குரேஷியா, செக் மற்றும் இந்த்தாலி அகிய  ஐரோப்பிய நாடுகளில் உள்ள உக்ரைன் தூதரகங்களுக்கு, விலங்குகளின் கண்கள் அடங்கிய, ரத்தம் தோய்த்த  பார்சல் அனுப்பப்பட்டு இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாட்ரிட்டில் உள்ள உக்ரைன் தூதரகங்களுக்கு வந்த பார்சலை பலத்த பாதுகாப்புடன் திறந்த அதிகாரிகள், அதில் பதப்படுத்தப்பட்ட  விலங்குகளின் கண்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  

முதலில் கடித வெடிகுண்டு.. அடுத்து ரத்தம் தோய்ந்த மர்ம பார்சல்.. - உக்ரைன் தூதரங்களுக்கு தொடரும் அச்சுறுத்தல்..

இதனை அடுத்து மார்ட்ரிட்டில்  உள்ள உக்ரைன் தூதரகத்தை ராணுவத்தினர் சுற்றி வளைத்து மோப்ப நாய்களுடன் சோதனை மேற்கொண்டனர்..  மர்ம பார்சல்கள் வந்துள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன்,  பார்சல்களை அனுப்பியவர்கள் குறித்து ஸ்பெயின் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது..