பொருளாதார நெருக்கடி - யாழ்பாணம் விமான நிலையம் மூடல்?

 
jaffna airport

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக  யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை நிரந்தரமாக மூட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

கொரோனா பரவலைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் போக்குவரத்துகள் இடை நிறுத்தப் பட்டிருந்தன. கொரோனா நெருக்கடி நிலைமை தீர்ந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்ட பின்னரும்கூட இன்றுவரை யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கான எந்த ஏற்பாடுகளும் நடைபெறவில்லை. இருந்தபோதிலும்  யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தற்போதும் தமிழ் இளைஞர்கள் 16 பேர் உட்பட 30 பேர் பணி யாற்றுகின்றனர். இவர்களுக்கான சம்பளக் கொடுப்பது குறித்து விமான நிலையத்தை நிர்வகிக்கும் நிறுவனம் செலவிடுகிறது. இதன் தொடராகவே இந்த விமான நிலையத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக் கப்படுகின்றது.

jaffna airport

2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய விமான சேவை 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி வரை யான ஐந்து மாத காலம் செயல்பட்ட போது வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் நன்மையடைந்தனர். இந்தியாவுக்கு செல்லும் பயணிகள் கொழும்பு சென்று அங்கிருந்தே இந்தியாவுக்கு செல்லும் நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடியாக இந்தியா செல்வதற்கான வாய்ப்பு அந்த  காலப் பகுதியில் காணப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது விமான நிலையத்தை  நிரந்தரமாக மூடுவதற்குத் அந்நாட்டு அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இருந்த போதிலும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூடுவது தொடர்பாக இலங்கை அரசு சார்பில் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.