உக்ரைன் மீதான ரஷ்ய ஏவுகணை தாக்குதல் மிருகத்தனமானது - ஜோ பைடன் கண்டனம்

 
joe biden

உக்ரைன் மீதான ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் மிருகத்தனமானது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்

நேட்டோ அமைப்புடன் உக்ரைன் சேர முயற்சித்து வந்த நிலையில், இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. போர் இன்றுடன் 230-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.  போரில் கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா, கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷியா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. இந்த பகுதி ஒட்டுமொத்த உக்ரைனின் 15 சதவிகிதம் ஆகும். இந்த நிலையில், இந்த நிலையில், உக்ரைனிடம் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட கிரீமியாவையும், ரஷியாவையும் இணைக்கும் முக்கிய பாலத்தில் சமீபத்தில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் அந்த பாலம் பலத்த சேதம் அடைந்ததோடு 3 பேர் உயிரிழந்தனர். 

ukraine

இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தியுள்ளது.  உக்ரைனின் கீவ் நகரம் மீது நேற்றுரஷ்ய படைகள் தொடர் ஏவுகனை தாக்குதல் நடத்தினர். உக்ரைன் தலைநகரான கீவ் நகரில் உள்ள குடியிருப்பு கட்டடங்கள், வணிக கட்டடங்கள், பொழுதுபோக்கு இடங்கள் என பொதுமக்களை இலக்காக வைத்து 80க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ரஷ்ய படைகள் வீசின. இதில் 50% ஏவுகணைகள் உக்ரைன் படைகளால் நடுவழியில் இடைமறித்து அழிக்கப்பட்டபோதிலும் எஞ்சிய ஏவுகணைகள் கீவ் நகரின் பல பகுதிகளை பற்றி எரிய வைத்தன. இந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

joe biden

இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் மிருகத்தனமானது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  உக்ரைன் மீதான ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர், ஏராளமானோர் காயமடைந்தனர். உக்ரைன் மக்கள் மீது புதின் நடத்தும் சட்ட விரோதப் போரின் முழுமையான மிருகத்தனம், மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. எங்களது நட்பு நாடுகளுடன் சேர்ந்து, ரஷ்யாவிற்கு தொடர்ந்து பாடம் புகட்டுவோம். இவ்வாறு கூறியுள்ளார்.