இந்த காலத்திலும் இப்படி! புதுமணத் தம்பதிகள் மூன்று நாட்களுக்கு கழிவறைக்கு செல்ல முடியாது!

 
tஇ

இந்த காலத்திலும் இப்படி நடக்குதா என்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.  ஆனால் எந்த காலத்திலும் சில பழக்க வழக்கங்கள் மாறாமல் அப்படியே தான் தொடர்ந்து வருகின்றன.  ஆத்திர அவசரத்திற்கு கூட புதுமணத் தம்பதிகள் கழிவறைக்கு செல்லக்கூடாது என்று ஒரு வினோத நடைமுறை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் இடையே இருந்து வருகிறது .  அதுவும் மூன்று நாட்களுக்கு திருமண தம்பதிகள் கழிவறையை உபயோகிக்க கூடாது.  கழிவறை பக்கமே செல்லக்கூடாது என்ற நடைமுறை இருக்கிறது.   இதற்காகவே அவர்களுக்கு மூன்று நாட்கள் உணவும்,  தண்ணீரும் குறைவான அளவில் கொடுக்கப்படுகிறது அவர்கள் கழிவறைக்கு செல்லாமல் இருக்க பாதுகாப்பு போடப்படுகிறது.    டிடாங் சமூகத்தைச் சேர்ந்தவர்களிடையே தான் இந்த நடைமுறை இருந்து வருகிறது.

ட்

இந்தோனேசியாவுக்கும் மலேசியாவுக்கும் இடைப்பட்ட எல்லையான  வடகிழக்கு பகுதியான போர்னியோ என்கிற இடத்தில் தான் டிடாங் பழங்குடி சமூகத்தினர் வசித்து வருகின்றார்கள் .  இந்த சமூகத்தினர் இடையே தான் இப்படி ஒரு விசித்திர பழக்கம் தொடர்ந்து வருகிறது.   இந்த சமூகத்தில் இருப்பவர்கள் திருமணம் செய்து கொண்டால் திருமணம் முடிந்து மூன்று நாட்கள் வரைக்கும் கழிவறையை உபயோகிக்க கூடாது என்கிற நடைமுறை இருக்கிறது.  அப்படி இந்த நடைமுறையை மீறி விட்டால் அவர்களின் வாழ்க்கையில் பயங்கர விளைவுகள் ஏற்படும் என்று அச்சமூகத்தினர் நம்பி வருகின்றனர்.

 திருமணம் முடிந்து மணமக்கள் சுமார் 3 நாட்களுக்கு கழிவறைக்கு செல்ல முடியாது. திருமணமாகி 3 நாட்கள் கழிவறையை பயன்படுத்தினால் பார்வை கெட்டுவிடும் என்று இவர்கள் நம்புகிறார்கள். தவிர, புதிதாக திருமணமான அவர்களது திருமணமும் முறிந்து போகலாம் அல்லது இருவரில் ஒருவர் இறந்து போகலாம் என்ற அச்சம் இருக்கிறது. அதனால்தான் கழிவறைக்கு செல்ல விடாமல் தடுக்கப்படுகிறார்கள். 

டி

 இளம் வயதிலேயே தம்பதியின் குழந்தைகள் உயிரிழந்து விடும்.  இப்படி பல சோகங்கள் அவர்களின் வாழ்க்கையின் நிகழும்.  இந்த நடைமுறையை பின்பற்றாவிட்டால் என்று காலம் காலமாக அச்ச சமூகத்தினர் இடையே இந்த நம்பிக்கை நீடிக்க வருகிறது. 

புதுமண தம்பதிகள் மூன்று நாட்கள் கழிவறைக்கு செல்லக்கூடாது என்பதற்காகவே மூன்று நாட்களும் குறைவான நீர்,  குறைவான உணவு மட்டுமே அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.   அவர்களை கண்காணிப்பதற்காகவே ஒரு குழு பாதுகாப்பிலேயே வைக்கப்படுகிறது.

ஆத்திர அவசரத்திற்கு கூட  திருமண தம்பதிகள் மூன்று நாள் வரைக்கும் கழிவறை பக்கம் போக முடியாது.  மூன்று நாள் கழித்த பின்னர் தான் அந்த தம்பதியினரை குளிக்கவும்,  கழிவறை உபயோகப்படுத்தவும் அனுமதி அளிக்கிறார்கள்.  புதுமண தம்பதிகளுக்கு இந்த நடைமுறை ஒரு சவாலாகவே இருந்து வருகிறது.  இன்றைய காலகட்டத்தில் அந்த பழங்குடி மக்கள் இப்படி ஒரு  சடங்கினை கடைபிடித்து வருவது  வினோதமாக தான் இருக்கிறது.