அர்ஜென்டினா தலைநகரில் வெற்றியை கொண்டாட குவிந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் - பொதுவிடுமுறை அறிவிப்பு

 
Argentina

கால்பந்து உலகக்கோப்பை வெற்றியை கொண்டாட அர்ஜென்டினா தலைநகர் புவெனோ ஐரெஸில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்தனர். வெற்றியை கொண்டாட இன்று பொது விடுமுறை அறிவித்த அர்ஜென்டினா அரசு.

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த கால்பந்து உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நேற்று முன் தினம் கத்தாரில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜென்டினா அணியின் கையே வாங்கியது. தனக்கு கிடைத்த பெனால்டி வாய்பை பயன்படுத்திய மெஸ்ஸி கோலாக மாற்றி 1 - 0 முன்னிலைப்படுத்தினார். ஆட்டத்தின் 36 வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் ஏடி மரியா மற்றொரு கோல அடிக்க அர்ஜென்டினா அணி வெற்றியை நோக்கி பயணித்தது. ஆட்டம் ஏறக்குறைய அர்ஜென்டினா அணியிடம் சென்ற போது பிரான்சின் கிளியன் எம்ப்பாவே 80 மற்றும் 81வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். ஆட்டம் இரண்டுக்கு 2 - 20 என சமனில் முடிய , கூடுதல் நேரத்தில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி 108 வது இடத்தில் ஒரு கோல் அடித்தார். பதிலுக்கு பிரான்சின் கிளியன் எம்ப்பாவே  117வது நிமிடத்தில் மீண்டும் ஒருமுறை கோல் அடித்து ஆட்டத்தை சமனியில் முடித்தார். கூடுதல் நேரத்திலும் சமநிலை முடிந்ததால் ஆட்டம் பெனால்டி சூட் முறைக்கு சென்றது.

argentina

இதில் பிரான்ஸ் 5 முறையில் 3 முறை மட்டுமே கோல் அடித்தது. ஆனால் அர்ஜென்டினா தன்னுடைய முதல் நான்கு வாய்ப்புகளையும் கோலாக்கி உலக கோப்பையை தனதாக்கிக் கொண்டது. நீண்ட காலமாக உலக கோப்பையை வெல்லாமல் இருந்த அர்ஜென்டினாக்கு மெஸ்ஸி உலக கோப்பையை வாங்கி கொடுத்து தனது நீண்ட நாள் ஆசையையும் நிறைவேற்றினார்.  1986 ஆம் ஆண்டில் மரடோனா தலைமையில் அர்ஜென்டினா அணி மகுடம் சூடிய  நிலையில் மெஸ்சியும் தனது அதிரடி மேஜிக் மூலம் மீண்டும் உலக கோப்பையை தங்கள் வசப்படுத்தினார். இதனையடுத்து வெற்றி பெற்ற அர்ஜெண்டினா அணிக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

argentina

இந்த நிலையில் கால்பந்து உலகக்கோப்பை வெற்றியை கொண்டாட அர்ஜென்டினா தலைநகர் புவெனோ ஐரெஸில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்தனர். வெற்றியை கொண்டாட அர்ஜென்டினா அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது.