ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டுவெடிப்பு - 33 பேர் உயிரிழப்பு ; 43 பேர் காயம்...

 
ஆப்கானிஸ்தானில்  மசூதியில் குண்டுவெடிப்பு - 33 பேர் உயிரிழப்பு ; 43 பேர் காயம்...

ஆப்கானிஸ்தான் குண்டூஸ் பகுதியில் அமைந்துள்ள மசூதியில் நேற்று ( வெள்ளிக்கிழமை ) தொழுகையின்போது நடந்த குண்டுவெடிப்பில்  33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 43காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில்  மசூதியில் குண்டுவெடிப்பு - 33 பேர் உயிரிழப்பு ; 43 பேர் காயம்...

ஆப்கானிஸ்தானின் வடக்கு குண்டூஸ் மாகாணத்தின் இமாம் சாஹில் மாவட்டத்தில் அமைந்துள்ளது மவ்லவி செகந்தர் மசூதி. நேற்று வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்காக இந்த மசூதியில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  பலர் காயமடைந்தனர்.  இதனையடுத்து  இந்த கோர விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர். ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் வசம் சென்றதிலிருந்தே அங்கு அடிக்கடி குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறிய வண்ணமே  உள்ளன.

ஆப்கானிஸ்தானில்  மசூதியில் குண்டுவெடிப்பு - 33 பேர் உயிரிழப்பு ; 43 பேர் காயம்...

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக  விலக்கமளித்துள்ள தாலிபன்கள் நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர், குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தினார். மேலும் 43 பேர் காயமடைந்துள்ளதக குறிப்பிட்ட அவர், இந்த சம்பவங்களுக்கு காரணமாக தீய சக்திகளை கைது செய்து தண்டிக்க தீவிர முயற்சி எட்டுக்கப்பட்டு வருவதாக கூறினார்.   ஆனால் இந்த மசூதி குண்டுவெடிப்பிற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்க வில்லை.. தாலிபன்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து நாடு பாதுகாப்பாக இருப்பதாக கூறிவருகின்றனர். ஆனால் சர்வதேச அதிகாரிகளும், ஆய்வாளர்களும் மீண்டும் போர்ச்சூழல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுளதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.