உக்ரைன் நாட்டுக்கு ராணுவ உதவி வழங்கப்படும் - நேட்டோ அமைப்பு அறிவிப்பு

 
Nato

ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வரும் உக்ரைன் நாட்டுக்கு ராணுவ உதவி வழங்கப்படும் என நேட்டோ அமைப்பு அறிவித்துள்ளது.

நேட்டோ அமைப்பில் இணைய முயற்சித்தது மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் உறவு வைத்தது உள்ளிட்ட உக்ரைன் நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போரை தொடங்கியது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 3 மாதங்களை நெருங்கி வரும்  நிலையில் போரின் தாக்கம் என்பது இன்றும் குறையாமல்  உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் நாட்டை காலி செய்து விட்டு அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இரண்டு மாதத்தை கடந்தும் போர் நடைபெற்று வரும் நிலையில், இதனால் பெரும் பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். முக்கிய துறைமுக நகரங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வரும் உலக நாடுகள், உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.  

nato

இந்நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து போரிட்டு வரும் உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கப்படும் என நேட்டோ அமைப்பு அறிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் மாகாணத்தை தன்வசப்படுத்தி அதனை தனி நாடாக அறிவிக்க ரஷ்யா முயற்சித்து வரும் நிலையில், உக்ரைன் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் ரஷ்ய படைகள் முன்னேற முடியாமல் திணறி வருகின்றன. இந்நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து போரிட்டு வரும் உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்ட நேட்டோ அமைப்புகள் முன்வந்துள்ளன. அதாவது ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து போரிட உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கப்படும் என நேட்டோ அமைப்பு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரஷ்யாவை ஆத்திரமடைய செய்துள்ள போதிலும், உக்ரைனுக்கு இது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது