உக்ரைனுக்கு ஆயுத தொகுப்பு வழங்குகிறது நேட்டோ

 
nato

ரஷ்யாவை எதிர்த்து போரிட உதவும் வகையில், உக்ரைனுக்கு ஆயுத தொகுப்பு வழங்க நேட்டோ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

நேட்டோ அமைப்பில் இணைய முயற்சித்தது மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் உறவு வைத்தது உள்ளிட்ட உக்ரைன் நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போரை தொடங்கியது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 3 மாதங்களை கடந்து நான்காவது மாதத்தை எட்டியுள்ள நிலையில் போரின் தாக்கம் என்பது இன்றும் குறையாமல்  உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் நாட்டை காலி செய்து விட்டு அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். ரஷ்யாவின் கொடூர தாக்குதலால்   பெரும் பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். முக்கிய துறைமுக நகரங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வரும் உலக நாடுகள், உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இதேபோல் ரஷ்யாவிற்கு எதிர்வினையாற்றும் வகையில் பொருளாதார தடைகளையும் விதித்தன. இருந்த போதிலும் ரஷ்யா போரை நிறுத்தவில்லை. இதேபோல் நேட்டோ அமைப்பும் உக்ரைனுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. 

Nato

இந்நிலையில், ரஷ்யாவை எதிர்த்து போரிட உதவும் வகையில், உக்ரைனுக்கு ஆயுத தொகுப்பு வழங்க நேட்டோ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயுத தொகுப்பு வழங்குவது குறித்து ஜூலை மாதம் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் முடிவு செய்யப்படும் என நேட்டொ செயலாளர் ஜென்ஸ் தெரிவித்துள்ளார்.  நேட்டோவின் ஆயுத உதவியால் ரஷ்யாவிடம் இழந்த டான்பாஸ் பிராந்தியத்தை உக்ரைன் கைப்பற்றும் எனவும் நேட்டொ செயலாளர் ஜென்ஸ் தெரிவித்துள்ளார்.