உலகை அச்சுறுத்தும் குரங்கு அம்மை நோய் - அமெரிக்காவில் ஒருவருக்கு பாதிப்பு

 
monkeypox

இங்கிலாந்து, போர்ச்சுக்கல், ஸ்பெயின் நாடுகளை தொடர்ந்து அமெரிக்காவிலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தை சேர்ந்த அவர், ஏப்ரல் இறுதியில் கனடாவிற்கு சொந்த வாகனத்தில் சென்று விட்டு, மே மாத தொடக்கத்தில் மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்பியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சின்னம்மையை உண்டுபண்ணும் வைரஸ்கள் குடும்பத்தை சேர்ந்த ஒரு வைரஸ் பாதிப்பாலேயே குரங்கு அம்மை நோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படும் நபருக்கு சின்னம்மைக்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசியே குரங்கு அம்மை நோய்க்கும் பலனளிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாதிப்பு ஏற்பட்டு 4 நாட்களுக்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. குரங்கு அம்மை நோயால் குழந்தைகளே அதிக அளவில் உயிரிழக்க வாய்ப்பு உள்ளதாகவும், ஓரின சேர்க்கையாளர்களுக்கும் குரங்கு அம்மை நோய் பரவு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. போர்ச்சுக்கல், ஸ்பெயின் நாடுகளில் 40க்கும் மேற்பட்டோருக்கு  குரங்கு அம்மை நோய் இருப்பது தெரியவந்துள்ளது. நோயினால் பாதிக்கப்பட்டோர் பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் இந்த நோய் பரவலாம் என கூறப்படுகிறது. 
 

monkeypox


சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வருகிறது. டெல்டா, ஆல்ஃபா, ஓமைக்ரான், XE என பல்வேறு உருமாற்றங்கள் அடைந்து உலகை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணி ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், வைரஸ் உருமாற்றம் காரணமாக தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், புதிதாக குரங்கு அம்மை நோய் பரவி வருவதாக கூறப்படும் சம்பவம் உலக மக்களை அதிர்ச்சி அடைய செய்டுள்ளது.