ரிக்கி பாண்டிங் மருத்துவமனையில் அனுமதி

 
r

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு மருத்துவர்கள் இதயத்தில் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.  பெர்த் நகரில் நடந்து வரும் முதல் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது.   இந்த போட்டியில்  வர்ணனையாளராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இருந்தார். 

rii

 போட்டியின் போது அவருக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டது.  இதை அடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.  அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.  இதயத்தில் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருவதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங், 1995ம் ஆண்டு  முதல் 2012 ம் ஆண்டு வரையிலான கிரிக்கெட் வாழ்க்கையில் 13378-டெஸ்ட் மற்றும் 13704 ஒருநாள் ரன்களை எடுத்துள்ளார். 

2012ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பாண்டிங், 2004ம் ஆண்டு  முதல் 2010ம் ஆண்டு வரை 77 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வழிநடத்தி, அதில் 48 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 

 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவை உலகக் கோப்பைப் பட்டத்திற்கு அழைத்துச் சென்ற ஆட்டத்தில் மிகச்சிறந்த ஒருவராகக் கருதப்படுகிறார் ரிக்கி பாண்டிங். இந்தியாவுக்கு எதிரான 2003 இறுதிப் போட்டியில் பாண்டிங்கின் இன்னிங்ஸ் ஆஸ்திரேலியா  உலக சாம்பியன் பட்டத்தை வெல்வதை உறுதி செய்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.