இங்கிலாந்துக்கு நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்குவேன் - பிரதமர் ரிஷி சுனக்

 
Rishi Sunak -   ரிஷி சுனக்

இங்கிலாந்துக்கு நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்குவேன் எனவும், இந்த பொறுப்பில் இருந்துகொண்டு நாட்டுக்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் எனவும் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்தின் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ்ஸுக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் ஏற்பட்டதை அடுத்து கடந்த 20 ஆம் தேதி அன்று பிரதமர் பதவியில் இருந்து  விலகினார். லிஸ் டிரஸ்ஸுக்கு அடுத்து ஆளும் கன்சர்வேடிங் கட்சியின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கின.   இந்த போட்டியில் ரிஷி சுனக்கிற்கு நாடாளுமன்றத்தில் 142 எம்பிக்களின் ஆதரவு இருந்ததால் அவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். பிரிட்டன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக் நேற்று முன் தினம் மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்தார். அப்போது அவரை பிரதமராக நியமனம் செய்து, புதிய அரசை அமைக்கும்படி கேட்டுக் கொண்டார்.  இதனை தொடர்ந்து ரிஷி சுனக்கிற்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 200 ஆண்டுகளில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக, இளம் பிரதமர் என்ற பெருமையுடன் இந்த பதவியை அலங்கரிக்கிறார்.

Rishi Sunak -   ரிஷி சுனக்

இந்நிலையில், இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் லண்டனில் உள்ள பிரதமர் இல்லத்தில் தீபவளியை கொண்டாடிய புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்து கொண்டதுடன், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது, "நம் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் பார்க்கக்கூடிய பிரிட்டனை உருவாக்க, இந்த பொறுப்பில் இருந்துகொண்டு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என்று உறுதியளித்தார்.