"போரினால் 97 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்" - அதிபர் செலன்ஸ்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

 
Ukraine President zelensky

உக்ரைனில் போர் தாக்குதலால்  97 குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ukraine war new

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக ராணுவ தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது. இதில் இரு தரப்புக்கும் பொருட் சேதமும் ,உயிர்ச் சேதமும் ஏற்பட்டாலும் தொடர்ந்து அடுத்தடுத்த தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு 21 நாட்கள் ஆகிறது. அதிக அளவில் வீரர்களையும், தடவாளங்களையும் ரஷ்ய படைகள் இழந்துள்ளதால் தடுமாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ukraine War

ரஷ்யாவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உக்ரைனும் சரியான பதிலடியை கொடுத்து வருவதாகவும்,  இது ரஷ்யாவுக்கு சவால் நிறைந்த காலமாக மாறி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதனால் வெளிநாடுகளில் இருந்து படை வீரர்களை அழைத்து வந்து போரில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Ukraine president zelensky

இந்நிலையில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கனடா நாடாளுமன்றத்தில் அந்நாட்டு உறுப்பினர்கள் மத்தியில் காணொளியில் உள்ள வாயிலாக பேசிய அவர்,  உக்ரைனுக்கு ஆதரவளித்த கனடாவுக்கு நன்றி.  உக்ரைன் நகரங்களின் மீது ரஷ்யா அடுத்தடுத்த அதிரடியான தாக்குதல்களை நடத்தியது. அதுவும் அது மனிதாபிமானமற்ற தாக்குதல்களாக இருந்தது . ரஷ்யாவின் அத்துமீறல்களை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.  உக்ரைன் சந்தித்து வரும் பாதிப்புகள் சொல்ல முடியாதவை.  போரினால் இதுவரை 97 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்றார்.