உக்ரைனில் உள்ள அணுமின் நிலையம் மீது ரஷ்யா தாக்குதல் - உலக நாடுகள் கண்டனம்

 
ukraine power plant

உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதல் 9-வது நாளாக நீடித்து வருகிறது. தொடர் தாக்குதல் காரணமாக உக்ரைனில் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதால், அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். ராணுவ தளவாடங்கள், காவல் நிலையங்கள் உள்ளிட்டவை குறி வைத்து தாக்கப்ப்ட்டு வருவதாக கூறப்படுகிறது. 

ukraine

இந்நிலையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான உக்ரைனின், சேபோரிஷியா பகுதியில் உள்ள அணுமின் நிலையம் மீது அந்நாட்டு நேரப்படி அதிகாலையில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் அணுமின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 10 வாகனங்களில் வந்த 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தாக்குதல்களால் அணு உலைகள் சேதமடையவில்லை எனவும், பாதுகாப்பாக உள்ளதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. 

ukraine

ரஷ்யாவின் இந்த மோசமான தாக்குதலுக்கு உக்ரைன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அணு உலைகள் வெடித்திருந்தால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என தெரிவித்துள்ளது. அமெரிக்காள் உள்ளிட்ட நாடுகளும் அணுமின் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.