உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தம் - ரஷ்யா அறிவிப்பு

 
stop war

உக்ரைனில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதியும்,  தாக்குதல் நடைபெற்ற பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளுக்காகவும் போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. 

மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயற்சித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. இருநாட்டு ராணுவ படைகளுக்கும் இடையேயான போர் 10வது நாளை எட்டியுள்ள நிலையில், தொடர்ந்து நடைபெற்று வரும் போரால், உக்ரைனில் பெரும் பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் ரஷ்ய தரப்பிலும் ஆயிரக்கணக்கான ராணுவ வீர்ரள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.  

ukraine


 
இதனால் அங்கு வசிக்கும் வெளிநாட்டினர்  அண்டை நாடுகள் வழியாக தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி வருகின்றனர். இதேபோல் போர் நடைபெற்று வரும் உக்ரைன் மக்களும் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளான ரோமானியா, போலந்து, மால்டோவா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இன்று காலை வரை உக்ரைன் மீதான போரை தொடர்ந்து வந்த ரஷ்ய ராணுவம் பொதுமக்களின் நலன் கருதி போரை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.  

ukraine

தாக்குதல் நடைபெற்ற இடங்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காகவும், மீட்பு பணிகளுக்காகவும் உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ரஷ்ய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   போர் நிரந்தரமாக நிறுத்தப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பும் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வரை தாக்குதலை நிறுத்துமாறு இந்தியா ரஷ்யாவிடம் கேட்டுக்கொண்டது குறிப்பிடதக்கது.