ஷேன் வார்னேவின் கடைசி டுவிட்! இரங்கல் தெரிவித்த 12 மணி நேரத்தில் அவருக்கும் இரங்கல்

 
w

 கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே மரணத்திற்கு உலகமெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.   இந்த ஜாம்பவானின் கடைசி  டுவிட்டர் பதிவும் ஒரு கிரிக்கெட் வீரரின்  மரணத்திற்கு தெரிவித்த இரங்கலாகத்தான் இருக்கிறது.

 ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வார்னே தாய்லாந்தில் இருக்கும் சொகுசு விடுதியில் மயங்கிக் கிடந்து இருக்கிறார்.   அவரை மீட்டு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.  

ww

 ஷேன் வார்னேவின் இந்த திடீர் மரண செய்தி கிரிக்கெட் உலகை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.   ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த மனிதரான வார்னேவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று அந்நாட்டு பிரதமர் அறிவித்திருக்கிறார்.

சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஆக இருந்து உலகமெங்கிலும் ரசிகர்களை குவித்திருக்கும் ஷேன் வார்னே ஓய்வுக்குப் பின்னர் வர்ணனையாளராக பணியாற்றி வந்தார்.   சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி கிரிக்கெட் விளையாட்டு குறித்து தனது கருத்துகளை பதிவிட்டு வந்தார்.

இவர் மாரடைப்பால் மரணம் அடைவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பாக  ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ராட் மார்ஷ் மரணத்திற்கு  இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

s

 அந்த இரங்கல் பதிவில்,  ராட் மார்ஷ் காலமானார் என்கிற செய்தி கேட்டதும் வருத்தமாக இருக்கிறது.  இளம் வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் அவர் ஒரு உத்வேகமாக இருந்தார்.  ராட் மார்ஸ் கிரிக்கெட் மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர்.   அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.  அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்திருக்கிறார்.

 அந்த டுவிட்டை பதிவு செய்த பின்னர் 12 மணி நேரத்தில் ஷேன் வார்னேவும்  மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்து, அவருக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.