நியூ அயர்லாந்து தீவில் பயங்கர நிலநடுக்கம் - மக்கள் பீதி

 
earth

பப்புவா நியூ கினியா அருகே உள்ள நியூ அயர்லாந்து தீவு பிராந்தியத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிப்பது ஆகும். இந்த அதிர்வு நிலநடுக்கமானியினால்  ரிக்டர் அளவை மூலம் அளக்கப்படுகிறது. 3 ரிக்டருக்கும் குறைவான நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும். அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பலத்த சேதத்தை ஏற்படுத்தும். இந்நிலையில்,  பப்புவா நியூ கினியா அருகே உள்ள நியூ அயர்லாந்து தீவு பிராந்தியத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 புள்ளிகளாக பதிவானது. நில நடுக்கம் 100 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நில நடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் மற்றும் உயிர்சேதங்கள் தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை.