போரில் கொல்லப்பட்ட 210 உக்ரைன் வீரர்களின் உடல்கள் ஒப்படைப்பு...

 
போரில் கொல்லப்பட்ட 210 உக்ரைன் வீரர்களின் உடல்கள் ஒப்படைப்பு...

ரஷ்யா - உக்ரைன் தாக்குதலில் கொல்லப்பட்ட 210 உக்ரைன் வீரர்களின் உடல்களை ரஷ்யா ஒப்படைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது , ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போர் தொடங்கியது. இந்த தாக்குதல் 100 நாட்களைக் கடந்துவிட்டது. இருந்தபோதிலும் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை.. ஆரம்பத்தில் கண்டனத்தை வலுவாக பதிவு செய்துவந்த, உலக நாடுகள் பின்னர் தங்கள் நாட்டுப் பணிகளில் கவனம்  செலுத்த தொடங்கிவிட்டன. ஊடகங்களுக்கும் இதே நிலை தான்.. ரஷ்ய படைகளின்  தாக்குதலுக்கு இரையாகி  உக்ரைன் நாடே உருகுலைந்து போய் கிடக்கிறது.  தலைநகர் கீவ், மற்ற பெரிய நகரமான கார்க்கிவ் போன்ற நகரங்களின் பெரும் பகுதிகள் ரஷ்ய படைகள் வசம் சென்றுவிட்டன. குறிப்பாக மரியுபோல் நகரை முழுமையாக தங்களது  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது ரஷ்யா..  
 ukraine
சில நாட்களுக்கு முன்  மரியுபோல் நகரில் சாலைகளிலும், குப்பைத் தொட்டிகளிலும், பதுங்கு குழிகளிலும் குவிந்து கிடந்த சடலங்கள உலக நாடுகளையே உலுக்கியது.  தற்போது கிழக்கு உக்ரைன் நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் ரஷ்ய படைகள்  தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது.   அங்குள்ள சியெவெரோ டொனட்ஸ்கி, லுஹான்ஸ்ட் நகரங்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி வருகிறது. பல நகரங்களில்  24 மணி நேரமும் குண்டு மழை பொழிந்த வண்ணம் இருக்கிறது.  இந்நிலையில் மரியுபோல்  நகரில் ரஷ்ய படையிடம் ஆயிரம் உக்ரைன் வீரர்கள் சரணடைந்தனர்.  அவர்கள் ரஷ்யா அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

ukraine War

இந்த நகரில் உள்ள இரும்பு ஆலை மீது கடந்த மூன்று மாதங்களாக ரஷ்யா வான் வழி, கடல் வழி கடுமையான தாக்குதலை நடத்தியது. இதில் பலர் கொல்லப்பட்டனர். இந்த போர் காரணமாக இரு நாடுகளுக்கும் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில்,  மரியுபோல் இருப்பு ஆலை தாக்குதலில் மரணமடைந்த 210 உக்ரைன் வீரர்களின் உடல்களை ரஷ்ய ஒப்படைத்துள்ளதாக அந்நாட்டின் ராணுவ புலனாய்வு ஏஜென்சி தெரிவித்திருக்கிறது.   ஆனால் அந்த இரும்பு ஆலையில் இன்னும் எத்தனை வீரர்களின் உடல்கள் இருக்கிறது என்பது தெரியவில்லை என்றும் கூறியுள்ளது. தற்போது  ஒப்படைக்கப்பட்ட வீரர்களின் உடல்களை  அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.