கார்கிவ் அணுமின் நிலையத்தை ரஷ்யா குண்டு வீசி சேதப்படுத்தியது - உக்ரைன் குற்றச்சாட்டு

 
karkiv

கார்கிவ் அணுமின் நிலையத்தை ரஷ்ய ராணுவம் குண்டு வீசி சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் போதாது என தெரிவித்துள்ளார். 

நேட்டோ அமைப்பில் இணைய முயற்சித்தது மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் உறவு வைத்தது உள்ளிட்ட உக்ரைன் நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போரை தொடங்கியது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 4 மாதங்களை கடந்தும்,  போரின் தாக்கம் என்பது இன்றும் குறையாமல் உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் நாட்டை காலி செய்து விட்டு அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். ரஷ்யாவின் கொடூர தாக்குதலால்   பெரும் பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். முக்கிய துறைமுக நகரங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வரும் உலக நாடுகள், உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இதேபோல் ரஷ்யாவிற்கு எதிர்வினையாற்றும் வகையில் பொருளாதார தடைகளையும் விதித்தன. இருந்த போதிலும் ரஷ்யா போரை நிறுத்தவில்லை. 

russia

இந்நிலையில், கார்கிவ் அணுமின் நிலையத்தை ரஷிய ராணுவம் குண்டு வீசி சேதப்படுத்தியதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைனின் வடகிழக்கு நகரமான கார்கிவில் உள்ள அணு ஆராய்ச்சி நிலையத்தை ரஷிய குண்டுவீசி தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.     ரஷியா நடத்திய  தாக்குதலில் வேலைநிறுத்த தளத்தின் சில கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பை சேதப்படுத்தியது, ஆனால் அணு எரிபொருள் மற்றும் கதிர்வீச்சு அளவுகள் சாதாரண வரம்பிற்குள் இருக்கும் பகுதியை பாதிக்கவில்லை. 

இதனிடையே ரஷியாவுக்கு எதிரான தற்போதைய பொருளாதாரத் தடைகள் போதாது என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.  ரஷியாவின் ஆக்கிரமிப்பைத் தடுக்க உக்ரைனுக்கான இராணுவ உதவியும், ரஷியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளும் போதுமானதாக இல்லை என்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.