சீனாவில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. ஆனால் அமெரிக்காவில்..

 
சீனாவில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. ஆனால் அமெரிக்காவில்..

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் இன்றி  கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. அதேநேரம் மேற்கத்திய நாடுகளில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக பல இடங்களில்  கொண்டாட்டங்கள் களையிழந்துள்ளன.  

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையகமான வேடிக்கனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.  10,000 மேற்பட்டோர் சிறப்பு திருப்பலியில் பங்கேற்றனர்.  செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் போப் பிரான்சிஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.  அதேபோல் இயேசு கிறிஸ்து பிறந்த இடமாக கருதப்படும் பாலஸ்தீனம் பெத்தலகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கலை கட்டின.  மின்னொலியில் ஜொலித்த பெத்தலகேமின்,   ஆயிரக்கணக்கானோர்  திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சீனாவில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. ஆனால் அமெரிக்காவில்..

ரஷ்யாவை போல உக்ரைனில் ஜூலியட் காலண்டரின் படி ஜனவரி 7ஆம் தேதியே ஆர்தராக்ஸ் கொண்டாடுவது வழக்கம். ஆனால் ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக பல்வேறு பகுதிகளில் மேற்கத்திய கலாச்சாரப்படி, இன்றே கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது.  தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் போருக்குமத்தியிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  சீனாவின் ஷாங்காய் நகரில் அரசின் கட்டுப்பாடுகளையும், எச்சரிக்கைகளையும் மீறி மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.  உருமாறிய  ஒமைக்ரான் பரவல் காரணமாக மக்கள் ஒரு வாரத்திற்கு வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்திய நிலையில்,  தனி நபர் இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்..

​சீனாவில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. ஆனால் அமெரிக்காவில்..

வழக்கமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டும் அமெரிக்காவில், வரலாறு காணாத பனிப்பொழிவு காரணமாக பல  பகுதிகளில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் களையிழந்தன.  பகுதியில் வெப்பநிலை 13 டிகிரியாக பதிவானதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். இது கிறிஸ்துமஸ் சமயத்தில்  கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச பனிப்பொழிவாக கருதப்படுகிறது. வெப்பநிலை தொடர்ந்து மைனஸ் டிகிரியிலேயே இருந்து வருவதால் ஆங்காங்கே வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன.  ஆகையால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

​சீனாவில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. ஆனால் அமெரிக்காவில்..

நியூயார்க், ஏதேன்ஸ்,  ஜார்ஜியா,  தெற்கு கரோலினா உள்ளிட்ட  பகுதிகளில் சுமார் 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கிறிஸ்துமஸ் சமயத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.  ஓக்கியோவில் பலத்த காற்றுடன் பனிமழை பெய்து வருகிறது.   மைனஸ் டிகிரி செல்சியஸில் வெப்பநிலை தொடர்ந்து நிலவுவதால் இதுவரை 16 பேர் அங்கு உயிரிழந்திருக்கின்றனர்.  20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் தவிர்த்து வருகின்றனர்.  ஆகையால் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வழக்கம் போல் இல்லாமல் களையிழந்து காணப்படுகின்றன..