#worldsightday உலக பார்வை தினத்தின் நோக்கம் இதுதான்!!

 
tn

ஒவ்வொரு ஆண்டும் உலகப் பார்வை தினம்  அக்டோபர் மாதத்தில் வரும் 2ஆம் வார  வியாழக் கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இது அக்டோபர் 13-ஆம் தேதியான இன்று உலகப் பார்வை தினம்  உலகளவில் கடைப்பிடிக்கப்படுகிறது.

t

நம் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான உறுப்பு என்றால் அது கண். உலகின் அழகை காண கண்கள் நமக்கு வழிவகை செய்து தருகிறது.  அதே சமயம் அழகான கண்கள் முகத்திற்கு எப்போதுமே கூடுதல் அழகை தரும்.  அப்படிப்பட்ட கண்களை நாம் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வது மிக மிக அவசியம்.  நாம் செய்யும் சில பணிகளின் காரணமாக நம் கண்கள் பாதிப்படைகிறது.  இரவு நேரங்களில் அதிக நேரம் கண்விழிப்பது ,அதிக நேரம் டிவி பார்ப்பது ,கணினி,  லேப்டாப் போன்றவற்றை உபயோகிப்பது ஆகியவை நம் கண்களின் ஆரோக்கியத்தை கெடுக்கும் செயல்கள்.

tn

கண்பார்வை இழப்பை தடுப்பது கண் குறைபாடு பிரச்சனையை தடுப்பது ஆகியவை தான் உலக கண் பார்வை தினத்தின் உயரிய நோக்கம்.  பிறவியிலேயே கண் பார்வை இல்லாதவர்கள், உணவு குறைப்பாட்டால் காலப்போக்கில் பார்வை இழப்பவர்கள் சமூகத்தில் பல இன்னல்களை சந்தித்து வருவதை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம் . ஆனால் பிறக்கும்போதே பார்வையை பெற்ற பிறகு அதை இழப்பது என்பது மிகக் கொடுமையான ஒரு விஷயம்.  இதை தடுக்கும் வகையில் கண் பார்வை குறைபாட்டிற்கு முக்கிய காரணிகளான கண்புரை , கண் அழுத்த நோய்,  கண்ணில் பூ விழுதல் போன்றவற்றை தடுக்கும் வகையில் உலக கண் பார்வை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

th

உலக சுகாதார அமைப்பு விஷன் 2020 என்ற திட்டத்தின் மூலம் நோய்களால் எவரும் பார்வையை இழக்கக்கூடாது என்பதை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறது. கண்ணை நாம் பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும் .நமது உள்ளத்து உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் முக்கிய காரணி கண்களே.   கண்களில் உண்டாகிற பிரச்சனைகள் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி நம் அழகுக்கும் உகந்ததல்ல . கண் பார்வையற்ற விழிப்புலன் அற்ற மனிதர்களால்  நமது கவனம் ஈர்க்கப்பட வேண்டிய நல்லதோர் வாய்ப்பினை உலகுக்கு வெளிச்சம் இட்டு காட்டுவதற்காகவே உலக பார்வை தினம்  உலகளவில் கொண்டாடப்படுகிறது.


கண்களை பற்றிய பலரும் அறியாத தகவல்கள் 

tn

  • நம் கண்கள் 10,000 வேலை செய்யும் பாகங்களால் உருவாகியுள்ளது . ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 12 முறை கண்களை இமைக்கிறான். 
  • அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு பத்தாயிரம் முறை கண்கள் இமைக்கப்படுகிறது.   ஆறில் ஒரு பாகம் மட்டுமே வெளித்தோற்றத்திற்கு நம் கண்கள் தெரிகிறது. 
  • கண் இமை முடிகளின் ஆயுள் காலம் சராசரியாக 5 மாதங்கள் மட்டுமே.  நமது கண்கள் தோராயமாக 28 கிராம் உள்ளது. 
  •  நமது விழிகள் ஒரு நொடி பொழுதில் சுமார் 50 பொருட்களில் தனது பார்வையை பதிக்கிறது. பார்வை என்னும் செயலில் நமது மூளையின் பாதி பகுதி பங்கெடுத்துக் கொள்கிறது
  • கண்களின் பார்வைக்கூர்மை கண்களின் வகையை பொறுத்து மாறும். பார்வைக்கூர்மையை நிர்ணயிப்பது கண்களில் உள்ள செல்களின் திறமே ஆகும்.
  • மனிதனின் கண் வெளிச்சம் மற்றும் அழுத்தம் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒர் உறுப்பு ஆகும்.