பெண்கள் படிக்க தடை.. ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலைதூக்கிய அடக்குமுறை..

 
பெண்கள் படிக்க தடை.. ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலைதூக்கிய அடக்குமுறை.. 


 ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைகழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.  

ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு ஆண்டிற்கும் முன்னதாகத் தான்  தாலிபான் அமைப்பு  ஆட்சியை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து  ஆப்கானிஸ்தானில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள், அடக்குமுறைகளை அந்த அமைப்பு  அமல்படுத்தி வருகின்றது.  அதிலும் குறிப்பாக  பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் உச்சகட்டத்தை எட்டி வருகிறது.  ஆண்கள் துணையின்றி பெண்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை, விமானத்தில் தனியாக  பயணிக்க தடை, ஆடை கட்டுப்பாடு  உள்ளிட்ட  பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் படிக்க தடை.. ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலைதூக்கிய அடக்குமுறை.. 

அதனை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் 5ம் வகுப்புகளுக்கு மேல் மாணவிகள் கல்வி பயிலவும் தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக மகளிருக்கான நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் ஆப்கானிஸ்தானில்  பெண் கல்வியில் சீர்குலைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆப்கன் அரசின் இந்த அடக்குமுறைகளுக்கு பல்வேறு உலக நாடுகளும் எதிர்ப்பு  தெரிவித்தன. இதனால் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.  

இந்நிலையில்  தற்போது பெண்கள் பல்கலைக்கழகங்களுக்கு சென்று படிக்கவும் இடைக்கால தடை விதித்து தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பெண்கள் கல்லூரிகளுக்கு நுழையக்கூடாது என ஆப்கானிஸ்தான் உயர்கல்வி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.