60 கோடியை நெருங்கும் உலக அளவிலான கொரோனா பாதிப்பு

 
corona

உலக அளவிலான கொரோனா பாதிப்பு 60 கோடியை நெருங்கி வரும் நிலையில், மொத்த உயிரிழப்பு 64.68 கோடியை தாண்டியுள்ளது. 

சீனாவில் உள்ள வூஹான் நகரத்தில் கடந்த 2019ம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது.  வைரஸ் உருமாற்றம் காரணமாக அடுத்தடுத்து கொரோனா அலைகள் வந்துகொண்டே உள்ளது. டெல்டா, டெல்டா பிளஸ், ஓமைக்ரான் என தொடர்ந்து வைரஸ் உருமாற்றம் அடைந்துகொண்டே வருவதால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. தடுப்பூசிகள் ஒருபக்கம் போடப்பட்டு வந்தாலும் வைரஸ் உருமாற்றத்தால் தடுப்பூசிகள் பலனளிக்கவில்லை. இருந்த போதிலும் தடுப்பூசி உயிரிழப்பை குறைத்து வருகிறது. 

south korea corona

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 கோடியை நெருங்கி வருகிறது. இதுவரை உலக அளவில் 59 கோடியே 94 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 57 கோடியே 34  லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேபோல் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 லட்சத்து 68 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதேபோல் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.