உலக அளவிலான கொரோனா பாதிப்பு 58 கோடியை தாண்டியது

 
corona corona

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 58 கோடியை தாண்டியுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 55.55 கோடியை  தாண்டியுள்ளது 

சீனாவில் உள்ள வூஹான் நகரத்தில் கடந்த 2019ம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது.  கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதலே அதனால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காதான். இதற்கு அடுத்ததாக இந்தியா, பிரேசில்,,பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டன. அடுத்தடுத்து கொரோனா அலைகள் வந்துகொண்டே உள்ளது. டெல்டா, டெல்டா பிளஸ், ஓமைக்ரான் என தொடர்ந்து வைரஸ் உருமாற்றம் அடைந்துகொண்டே வருவதால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. தடுப்பூசிகள் ஒருபக்கம் போடப்பட்டு வந்தாலும் வைரஸ் உருமாற்றத்தால் தடுப்பூசிகள் பலனளிக்கவில்லை. இருந்த போதிலும் தடுப்பூசி உயிரிழப்பை குறைத்து வருகிறது. 

china corona

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 கோடியே 49 லட்சமாக அதிகரித்துள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை  55 கோடியே 55 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேபோல் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 லட்சத்து 26 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,893  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.