உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா ? - பட்டியல் இதோ

 
finland


உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து நாடு தொடார்ந்து 5-வது முறையாக முதலிடத்தில் உள்ளது.

 உலக நாடுகளில் உள்ள மக்களின் மகிழ்ச்சியை, நல்வாழ்வு மற்றும் வாழ்க்கை மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையின் நீடித்த வளர்ச்சிக்கான தீர்வு அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது.அந்த வகையில் 2021-ம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் எட்டு இடங்களில் ஐரோப்பிய நாடுகளே உள்ளன. இந்த ஆண்டில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் மொத்தம் 146 நாடுகள் இடம்பெற்றுள்ளன. 

finland

பின்லாந்து தொடர்ந்து ஐந்தாவது முறையாக உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டென்மார்க் இரண்டாமிடத்தில் உள்ளது. ஐஸ்லாந்து மூன்றாம் இடத்திலும்,  சுவிட்சர்லாந்து நான்காம் இடத்திலும், நெதர்லாந்து ஐந்தாம் இடத்திலும் உள்ளன. லக்சம்பர்க், சுவீடன், நார்வே ஆகிய ஐரோப்பிய நாடுகள் முறையே ஆறாம், ஏழாம், எட்டாம் இடங்களில் உள்ளன. இஸ்ரேல் ஒன்பதாம் இடத்திலும், நியூசிலாந்து பத்தாமிடத்திலும் உள்ளன. இந்தியா 3 இடங்கள் முன்னேறி 136வது இடத்தில் உள்ளது.

afgan

அண்டை நாடான சீனா 72வது இடத்திலும், வங்க தேசம் 94-வது இடத்திலும் உள்ளது.. இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில், தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் நாடு உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக சிம்பாவே, லெபனான், ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளன