சீன அதிபராக ஷீ ஜின்பிங் 3வது முறையாக தேர்வு

 
china xi jinping

சீன அதிபராக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஷீ ஜின்பிங் 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சீனாவில் ஒரு கட்சி ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது. ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின், ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடக்கும் மாநாடு தற்போது நடந்தது. அதில் சீன அதிபராக மூன்றாவது முறையாக ஷீ ஜிங்பிங் தொடரும் தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடந்தது.  இந்தக் கூட்டத்தில், மத்திய குழுவுக்கு, 205 நிரந்தர உறுப்பினர்களும், 171 மாற்று உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  மாநாட்டில் நடந்த ரகசிய ஓட்டெடுப்பில் மீண்டும் ஷீ ஜின்பிங் பொதுச்செயலாளராக  தேர்வு செய்யப்பட்டுள்ளார். 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜின்பிங் கட்சி பொதுச்செயலாளராகவும், அதிபராகவும் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பார். சீன கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய மாவோவுக்கு பிறகு அதிக காலம் அதிபராக இருப்பவர் என்ற பெருமையை ஜின்பிங் பெறுகிறார்.இதனையொட்டி உலக தலைவர்கள் பலரும் ஷீ ஜின்பிங்கிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஷீ ஜின்பிங் மீண்டும் நாட்டின் அதிபராக எதிர்ப்பு தெரிவித்து சீன மக்கள் வீதிக்கு வந்து போராடியது குறிப்பிடதக்கது.