"நான் ஓடி ஒளியுற ஆளு இல்ல.. திரும்ப அடிக்கிற ஆளு" - சூளுரைத்த உக்ரைன் அதிபர்!

 
புடின்

உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கி மூன்றாம் நாளாகிவிட்டது. போர் நிறுத்தப்படவில்லை. ரஷ்யா உக்ரைனின் ராணுவ மையங்களை அழித்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முக்கிய நகரங்களையும் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது. முதல் நாளின் போதே 200க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்களைக் கொன்றுவிட்டதாகவும், அச்சத்தில் உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களைப் போட்டு சரணடைந்து வருவதாகவும் ரஷ்ய ராணுவம் தகவல் கூறியது. ஆனால் உக்ரைன் அரசு அதனை முழுவதுமாக மறுத்தது. 

Ukraine's President Urges Cease-Fire, Urgent Peace Talks After Speaking  With Macron

மாறாக நாட்டு மக்களில் யாருக்கெல்லாம் ஆர்வம் இருக்கிறதோ நாட்டைப் பாதுகாக்கவும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் ஆயுதம் வாங்கிக் கொள்ள உக்ரைன் அரசு அனுமதியளித்துள்ளது. அதிலும் குறிப்பாக 18-60 வயதுக்குட்பட்ட ஆண்கள் யாரும் நாட்டை விட்டு வெளியேற கட்டாய தடை விதிக்கப்பட்டுள்ளது. போருக்கும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். உக்ரைன் அதிபரான ஜெலன்ஸ்கியே ஆயுதம் ஏந்தி களத்தில் இறங்கியுள்ளார். இச்சூழலில் அவர் ராணுவத்தை ரஷ்யாவிடம் சரணடைய சொன்னதாக தகவல் பரவியது.


ஆனால் அதெல்லாம் வதந்தி என அதிபர் ஜெலன்ஸ்கி என விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "நான் ராணுவத்தை சரணடைய சொல்லிவிட்டதாக வந்ததிகள் கிளப்பப்பட்டு வருகின்றன. அவ்வாறு நான் கூறவில்லை. நான் இங்கே தான் இருப்பேன். எங்கேயும் ஓடிவிட மாட்டேன். எனக்கு ஆயுதங்கள் தான் தேவை. தப்பியோடும் பயணம் அல்ல. எந்தச் சூழலில் நாட்டையும் நாட்டு மக்களையும் விட்டுக்கொடுக்க போவதில்லை. தீர்க்கமாக சொல்கிறேன். ரஷ்யா தாக்குதலை நிறுத்தாதவரை நாங்கள் எங்கள் ஆயுதங்களையும் கீழே போடமாட்டோம். இது எங்கள் நாடு, எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக போராடுகிறோம்” என்று பேசியுள்ளார்.