கலவர பூமியான சூடான் - இந்தியர் ஒருவர் உயிரிழப்பு..

 
கலவர பூமியான சூடான் - இந்தியர் ஒருவர் உயிரிழப்பு..

சூடானில் இராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இராணுவத்தினர்,  துணை ராணுவத்தினர் இடையே தீவிர சண்டை நடைபெற்று வருகிறது.    ஆயுதப்படைகள் இடையே நடந்த கடும் துப்பாக்கி சண்டையால்  56 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  595 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் சூடான் தலைநகர் கார்த்துமில் இரண்டாம் நாளாக தீவிர சண்டை நீடித்து வருகிறது. ஏற்கனவே சூடானில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ள நிலையில், தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார்.  இந்தியாவைச் சேர்ந்த ஆல்பர்ட் அகஸ்டின் என்பவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்திருப்பதாக சூடானுக்கான இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.  

கலவர பூமியான சூடான் - இந்தியர் ஒருவர் உயிரிழப்பு..

 உயிரிழந்த ஆல்ப தாகஸ்டின் குடும்பத்தினருடன் தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்து இருக்கிறது. ஆயுதப்படைகள் மோதல் காரணமாக சூடானில் பதற்றம் நிலவுவதால் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. துப்பாக்கி குண்டு சத்தத்தால் சூடான் தலைநகர் கார்த்தும் அதிர்ந்து வரும் நிலையில்,  இந்தியர் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறியதாக பீரங்கிகளால் இரு தரப்பும் தாக்கி கொள்வதால் தலைநகரம் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து காட்சியளிக்கிறது.   தலைநகர் கார்த்துமை அடுத்துள்ள ஓம்தூர்மன்,  பாஹ்ரி ஆகிய நகரங்களிலும் ராணுவத்தினருக்கும் துணை ராணுவத்திற்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு நடைபெற்று வருகிறது.