#BREAKING ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்திவைப்பு - ட்ரம்ப்

 
trump

ஈரான் மீது அடுத்த 5 நாட்களுக்கு அமெரிக்கா தாக்குதல் நடத்தாது என அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

US Spy Agencies' Report Says Trump Helped Ease India-Pakistan Tensions -  The Wire

ஈரான் மீது அடுத்த 5 நாட்களுக்கு அமெரிக்கா தாக்குதல் நடத்தாது. போரை 5 நாட்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபா் ட்ரம்ப் அறிவித்தார். இதுதொடர்பாக ட்ரம்ப்பின் அறிவிப்பில், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலை நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார். 2 நாட்களாக நடந்த பேச்சுவாா்த்தைக்கு பின்னா் போா் நிறுத்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாா் அதிபர் ட்ரம்ப். முதலில் 2 நாள் விதித்த கெடுவை தற்போது 5 நாளாக மாற்றிய ட்ரம்ப், ஈரான் - அமெரிக்கா இடையே நடக்கும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிடில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போர் நிறுத்தம் அறிவித்த அடுத்த நொடியே தங்கம் விலை எகிறியது. இன்று காலை, மாலையில் இரண்டு முறை தங்கம் விலை ரூ.7,600 குறைந்த நிலையில், மூன்றாவது முறையாக விலை ஏற்றம் கண்டுள்ளது. சென்னை ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.670 உயர்ந்து ரூ.13,340-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.5,360 அதிகரித்து சவரனுக்கு ரூ.1,06,720-க்கு விற்பனையாகிறது.