இலங்கையரை உயிருடன் எரித்து செல்பி எடுத்து கொண்டாட்டம் - பாகிஸ்தான் பயங்கரம்

 
pk

 இலங்கையைச் சேர்ந்த ஒருவரை நடுரோட்டில் உயிருடன் எரித்து,  அவர் எரிந்து கொண்டிருக்கும் தீயின் முன்பாக நின்று செல்பி எடுத்து கொண்டாடிய கொடூரம் பாகிஸ்தானில் நிகழ்ந்திருக்கிறது.   நடந்த சம்பவத்திற்கு உலகநாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில்,  இந்த நாள் பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள் என்று பிரதமர் இம்ரான்கான் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.

p

 பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் சியால்கோட் மாவட்டத்தில் இயங்கிவரும் தொழிற்சாலையில் இலங்கையைச் சேர்ந்த பிரியந்தா குமாரா என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்திருக்கிறார்.  இவர் பாகிஸ்தானில் இயங்கி வரும்  தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான் என்ற அரசியல் கட்சியை இழிவுபடுத்தி விட்டதாக,  அதாவது  அந்த கட்சியின் ஒரு போஸ்டரை கிழித்து குப்பையில் வீசி எறிந்து விட்டதாக சிலர் கொந்தளித்து உள்ளனர்.

 அந்த போஸ்டரில் குரானின் வாசகங்களை இருந்தன என்று கூறுகிறார்கள்.   இதை அங்கிருந்த சிலர் பார்த்துவிட்டு தொழிற்சாலையில் இருந்த மற்ற தொழிலாளர்களுக்கு தகவல் சொல்ல,   100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து வந்து பிரியந்தா குமாராவை சரமாரியாக அடித்து உதைத்திருக்கிறார்கள். பின்னர்  அவரை தரதரவென இழுத்துக்கொண்டு சாலைக்கு சென்ருக்கிறார்கள்.

pk

 அடித்து உதைத்து தரதரவென்று இழுத்து வந்த சித்திரவதையில் அவர்  மயங்கி விட்டார்.  சாலையில் நிற்க  வைத்து நிற்க முடியாமல் கீழே சுருண்டு விழுந்துவிட்டார். அதை பார்த்தும் அந்த கும்பலுக்கு ஆத்திரம் தீராமல் நடுரோட்டில் அவருக்கு தீவைத்து உயிருடன் கொளுத்தி இருக்கிறது.  அவர் உயிருடன் எரிந்தபோதும் அந்த தீயின் முன்பாக நின்று நாலா பக்கமும் நின்று செல்பி எடுத்துக் கொண்டு கொண்டாடியிருக்கிறார்கள்.

தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான்  கட்சியை சேர்ந்தவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.  இந்த சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

உலக நாடுகள்  கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில்,   இந்த சம்பவத்தில் தொடர்புடைய 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்திருக்கிறது.   மனிதாபிமானமற்ற இந்த செயலுக்கு பாகிஸ்தான் பிரதமர் வருத்தம்  தெரிவித்திருக்கிறார்.   இந்த நாள் பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள்  என்று தெரிவித்துள்ள அவர்,  தொடர்புடைய எல்லோருக்கும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக கைது நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.